புயல் சின்னம் 
தற்போதைய செய்திகள்

சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது?

சென்னையில் டிச. 11, 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.

DIN

வடதமிழகத்தில் டெல்டா முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிச. 11, 12 ஆகிய தேதிகளிலும், தென் தமிழகத்தில் டிச. 13, 14 ஆகிய தேதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மென் என்று அழைப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 11, 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், சமாளிக்ககூடிய மழையாகவே இருக்கும்.

அதேபோல், டிச. 11, 12 ஆகிய தேதிகளில் நாகை, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மட்டும் மழைக்கான சாதகமில்லா சூழல் நிலவுகிறது. தென் தமிழகம் உள்ளிட்ட ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிச. 13,14 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும், ஆனால் வட தமிழகத்தை ஒப்பிடும்போது குறைவான மழைப்பொழிவு இருக்கும்.

காற்றழுத்தம் மன்னார் வளைகுடா வழியாக அரபிக்கடலுக்குள் செல்லும்போது உள் தமிழகம், மேற்கு தமிழகத்தில் ஒரு நாள் மழை பெய்யும்.

கிறிஸ்துமஸ் வரை வடகிழக்குப் பருவ மழை பெய்யும். தமிழகத்தில் 500 மி.மீ. வரையும், சென்னையில் 1000 மி.மீ. வரையும் மழை பதிவாகும்.

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக தீவிரமடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வரும் டிச. 16-18 வரையிலான தேதியில் புதிய புயல் சின்னம் உருவாகவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT