திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும் காட்சி (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

டிச. 13-ல் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிச. 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

தீபத் திருவிழாவையொட்டி, டிச. 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இவ்விழாவையொட்டி அம்மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 8.12.2024 முதல் 16.12.2024 வரை 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிச. 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

அரசியலில் களமிறங்கும் சூர்யா? நற்பணி இயக்கம் மறுப்பு!

தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு!

SCROLL FOR NEXT