பாரதி பிறந்த நாள்: எட்டயபுரத்தில் தினமணி சார்பில் மரியாதை
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, எட்டயபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தினமணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளையொட்டி, எட்டயபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தினமணி சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க | பாரதியார் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை
Advertisement
Advertisement
பின்னர், பாரதி நினைவு இல்லத்தில் இருந்து, பாரதி அன்பர்கள், பள்ளி மாணவர் - மாணவிகள் பாரதியார் வேடமணிந்தும், பாரதி பாடல்களை பாடியவாறும் மணிமண்டம் நோக்கி ஊர்வலம் சென்றனர்.
மணிமண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியின் சிலைக்கு, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.