முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் முதலாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 7:13 AM
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் முதலாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பகிர்:

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் முதலாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 810 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது.

இதன்மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த நிலையில், புதன்கிழமை மேட்டூா் அனல் மின் நிலையத்தின் முதலாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. மற்ற அலகுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

கொதிகலன் குழாய் வெடிப்பை சரி செய்யும் பணியில் பொறியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். கொதிகலன் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →