முகப்பு
சூறாவளிக் காற்று காரணமாக, தூத்துக்குடி மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குச் செல்லாததால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
தற்போதைய செய்திகள்

சூறாவளிக் காற்று எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

சூறாவளிக் காற்று காரணமாக, தூத்துக்குடி மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குச் செல்லாததால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 12 டிசம்பர், 2024 at 3:39 AM
சூறாவளிக் காற்று காரணமாக, தூத்துக்குடி மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குச் செல்லாததால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
பகிர்:

தூத்துக்குடி: சூறாவளிக் காற்று காரணமாக, தூத்துக்குடி மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குச் செல்லாததால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் டிச.12,13-ஆகிய தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், மாவட்டத்தில் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள், பைபர் படகுகள் என சுமார் 300 படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறு மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →