குளிர்காலம் தீவிரமடைந்துள்ளதால் நெருப்புக் கொளுத்தி குளிர் காயும் மக்கள். 
தற்போதைய செய்திகள்

குளிர் அலை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தெலுங்கானாவில் குளிர் அலை எச்சரிக்கையாக நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

ஹைதராபாத்: தெலுங்கானாவில் குளிர் காலம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து குளிர் அலை எச்சரிக்கையாக நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய நாட்களில் அம்மாநிலத்தின் வெப்பநிலை இன்னும் குறையக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், அம்மாநிலத்தின் சில மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் எனவும் குளிர்க்கால சூழல் அதிகரித்து வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பெற்றோர் பைக் வாங்கி தராததால் சாவிகளை விழுங்கிய மகன்!

மேலும், வட மாவட்டங்களான அதிலாபாத், குமுராம்பீம் ஆசிஃபாபாத், மண்செரியல் மற்றும் நிர்மல் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதி வரை குளிர் அலை வீசக்கூடும் என மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும், அதன்பின்னர் வெப்பநிலை 4 முதல் 10 டிகிரி அளவில் குறையக்கூடும் என்பதினால் டிசம்பர் 16ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (டிச.11) அதிலாபாத்திலுள்ள பெலா எனும் ஊரில் அம்மாநிலத்திலேயே மிகவும் குறைந்த வெப்பநிலையான 7 டிகிரி செல்சியஸ் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழில் அறிமுகமாகும் கேஜிஎஃப் இசையமைப்பாளர்!

ரிதன்யா தற்கொலை வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

தவெக மாநாட்டுக்கு விஜய் வருகை! புறப்பட்ட தொண்டர்கள்!!

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்கள் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

SCROLL FOR NEXT