கனமழையின் காரணமாக முழுவதும் நனைந்து காணப்படும் தேர் 
தற்போதைய செய்திகள்

கனமழை: சுவாமிமலை கோவில் தேரோட்டம் ரத்து

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் திருத்தேரோட்டம் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் கனமழை காரணமாக ரத்து

DIN

தஞ்சாவூர் : கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் திருத்தேரோட்டம் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு இந்த விழா திருக்காா்த்திகை நாளான வெள்ளிக்கிழமை(டிச.13) நடைபெற இருந்தது. இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக தேர் முழுவதும் நனைந்து காணப்படுகிறது. இதனால் தேரை வடம் பிடித்து இழுத்து வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், மழை லேசாக விட்டதன் பிறகு சுவாமி அம்பாளை மட்டும் தேரின் உச்சி பீடத்தில் வைத்துவிட்டு இறக்கி விட முடிவு செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT