முதல்வர் ஸ்டாலின். கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

மழை பாதிப்பை எதிர்கொள்ள தயார்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை எழிலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக...

DIN

மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தென் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி – தென் மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

முதல்வர் ஸ்டாலினின் பதில் – தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது. அதற்கு ஏற்கனவே இரண்டு நாள்களாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதை மேற்பார்வையிடுவதற்காக இங்கிருந்து மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக ஏதும் செய்தி கிடையாது. எது வந்தாலும் அதை சமாளித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது.

கேள்வி - அமைச்சர்கள் கண்காணிப்புப் பணிகளில் இருக்கிறார்களா?

முதல்வர் ஸ்டாலினின் பதில் –  தென்காசி பகுதிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை அனுப்பி வைத்திருக்கிறோம். திருநெல்வேலிக்கு நேற்று அமைச்சர் நேரு ஏற்கனவே சென்று வந்திருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் மழை பெய்துள்ளதால் அங்கு வந்தவரை திருநெல்வேலியில் மறுபடியும் மழை பெய்துள்ளதால் அவரை அங்கு அனுப்பியிருக்கிறோம்.

கேள்வி – பேரிடர் நிதியை மத்திய அரசிடமிருந்து தொடர்ந்து நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நேற்றுகூட நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசியிருந்தார்கள். குறைவாகவே தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தருகிறார்கள். அது பற்றி…

முதல்வர் ஸ்டாலினின் பதில் – ஊடகத்தில் இருக்கக்கூடியவர்கள் நீங்கள் எல்லாம் அதனை தொடர்ந்து எழுதினீர்கள் என்றால், அதுவே பெரிய அழுத்தமாக இருக்கும்.

கேள்வி - ஏற்கனவே வழங்கிய நிதி போதுமானதாக இருக்கிறதா?

முதல்வர் ஸ்டாலினின் பதில் –  அது எப்படி போதும். போதுமானதாக இல்லை.

கேள்வி – நீர்த் தேக்கம், ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறதே வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து...

முதல்வர் ஸ்டாலினின் பதில் – திறந்து விடப்படுவதற்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து பொதுமக்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடத்திற்கு, பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கேள்வி – நிவாரணப் உதவிகள் வழங்கும் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதா... 

முதல்வர் ஸ்டாலினின் பதில் –  நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறதே.  கிட்டத்தட்ட வழங்கி முடிந்துவிட்டது.

கேள்வி – ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இது என்ன மாதிரியான எதிரொலியாக பார்க்கப்படுகிறது…

முதல்வர் ஸ்டாலினின் பதில் –  நேற்றே தெளிவாக அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது. எங்களால் முடிந்தவரைக்கும் ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம். 

கேள்வி – கூட்டணிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் திட்டம் ஏதும் இருக்கிறதா?

முதல்வர் ஸ்டாலினின் பதில் – பார்ப்போம், யோசனை செய்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT