கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

இரும்புக் கதவு சரிந்து குழந்தைகள் உள்பட 30 பேர் படுகாயம்!

ஒடிசாவில் நிகழ்ச்சியின்போது இரும்புக் கதவு சரிந்து பெண்கள் குழந்தைகள் உள்பட 30 பேர் படுகாயம்..

DIN

ஒடிசாவில் நிகழ்ச்சியின் போது இரும்புக் கதவு சரிந்து பெண்கள் குழந்தைகள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சாலேப்பூர் பகுதியில் ராய்சுங்கூடா எனும் கிராமத்தில் நேற்று (டிச.14) இரவு நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. இதனால் அப்பகுதியினர் பலர் அங்கு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த நிகழ்ச்சி வளாகத்தின் வாயிலிருந்த இரும்புக் கதவு தீடீரென சரிந்து விழுந்ததில் அதனை கடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்கள் குழந்தைகள் உள்பட கிட்டத்தட்ட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சாலேப்பூரிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதில், ஆறு பேருக்கு பலத்த காயங்கள் எற்பட்டுள்ளதால் மேற் சிகிச்சைக்காக எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறை; முதல் நாளிலேயே சூடுபிடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்!

ஒவ்வொரு நாளுக்கும் நன்றி... பிரியங்கா மோகன்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

கண் கவர மறையும் சூரியன்... ரைசா வில்சன்!

SCROLL FOR NEXT