கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

வைரல் விடியோ: காயப்பட்ட காட்டுமாட்டைத் தேடும் பணி தீவிரம்!

விடியோ வைரலானதைத் தொடர்ந்து, காயப்பட்ட காட்டுமாட்டைத் நீலகிரி வனத்துறையினர் தேடி வருவதைப் பற்றி..

DIN

நீலகிரி: காலில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டுமாடு ஒன்றின் விடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்தக் காட்டுமாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கரும்பாலம்-சொகத்துரை சாலையில் வலது காலில் ரத்தக் காயத்தோடு காட்டுமாடு ஒன்று சுற்றி வரும் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனைத்தொடர்ந்து, அதை மீட்டு அதன் காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக நீலகிரி வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து குன்னூர் வனப்பகுதி அதிகாரி ரவீந்திரநாத் கூறுகையில், பத்து பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் காட்டுமாட்டைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும். தனது கூட்டத்தோடு சுற்றித் திரியும் அந்த வனவிலங்கு இது வரையில் கிடைக்காததினால் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் (டிச.15) அதைத் தேடும் பணித் தொடரும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அந்தக் காட்டுமாட்டிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அவர் கூறுகையில், அந்தக் காட்டுமாடு ஏதெனும் வேலியின் மீது கால் வைத்ததினாலோ அல்லது சாலையோரமாக ஏதேனும் கூர்மையான பொருட்கள் குத்தியதினாலோ இந்தக் காயம் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் இதற்கு மேல் அந்த விலங்கை கண்டுப்பிடித்தால் மட்டுமே தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், காயப்பட்ட காட்டுமாடு கண்டுபிடிக்கப்பட்டவுடன் தெப்பக்காடு கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் அதற்கு மயக்கஊசி செலுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT