தற்போதைய செய்திகள்

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

இறுதிக்கட்டத்தில் மிஸ்டர் மனைவி தொடர்.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.

வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் மனைவிக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்துகொள்ள வேண்டும் என நினைக்கும் கணவனுக்கும் இடையே திருமண வாழ்க்கையில் நடைபெறும் சவால்களே மிஸ்டர் மனைவி தொடரின் மையக்கரு.

முன்னதாக, நடிகை ஷாபானா மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதில் அஞ்சலி பாத்திரத்தில் நடிகை தேப்ஜானி மொடாக் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார்.

இதையும் படிக்க: ரோஜா - 2 தொடரில் எதிர்நீச்சல் நடிகை!

மிஸ்டர் மனைவி தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இத்தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் டிச. 21 ஆம் தேதியோடு மிஸ்டர் மனைவி நிறைவடைகிறது.

மிஸ்டர் மனைவி தொடர் நிறைவடையவுள்ளது, இத்தொடர் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘ஹமாஸ் தலைவா்கள் எங்கிருந்தாலும் தாக்குவோம்’

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 73,178-ஆக உயா்வு

மொத்த விலை பணவீக்கம் மீண்டும் உயா்வு

ஆகஸ்டில் சரிந்த வா்த்தகப் பற்றாக்குறை

வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைத்த பிஓபி

SCROLL FOR NEXT