மெகிஸிகோ அதிபர் கிளாவுடியா ஷெயின்பாவும். 
தற்போதைய செய்திகள்

பூர்வகுடியினருக்கு சொந்தமான 2,000 ஹெக்டேர் நிலம் திரும்ப ஒப்படைப்பு!

மெக்ஸிகோ நாட்டில் பூர்வகுடியினருக்கு சொந்தமான 2,000 ஹெக்டேர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படவுள்ளதைப் பற்றி..

DIN

மெக்ஸிகோ நாட்டின் பூர்வகுடியினருக்கு சொந்தமான 2,000 ஹெக்டேர் நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க அந்நாட்டு அதிபர் ஆணை பிறப்பித்துள்ளார்.

மெக்ஸிகோவின் பூர்வீகப் பழங்குடியான ராராமுரி என்றழைக்கப்படும் தராஹுமாரா இனத்தவர் மிகப்பெரிய பள்ளத்தாக்குகளை உடைய சியாரா தாராஹுமாரா எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவுடன் எல்லையை பகிர்ந்துக்கொள்ளும் மெக்ஸிகோவின் வட மாநிலமான சிவாவாவில் தாராஹுமாரா மக்களுக்கு சொந்தமான சுமார் 2,000 ஹெக்டேர் நிலம் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட அந்நாட்டு அதிபர் கிளாவுடியா ஷெயின்பாவும் நேற்று (டிச.20) ஆணை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் கிளாவுடியா கூறுகையில், ஒரு மிகப்பெரிய பிரதேசம் அதன் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படுவதால் இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று அவர் கூறினார்.

அந்த ஆணையின் அடிப்படையில் மீட்டெடுக்கப்பட்ட இரு பகுதிகளான 1,485 ஹெக்டேர் மற்றும் 693 ஹெக்டேர் என மொத்தம் 2,000 ஹெக்டேர் பரப்பளவிலான நிலம், தாராஹுமாரா பழங்குடியைச் சேர்ந்த இரண்டு சமூக மக்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்படவுள்ளது.

மேலும், தாராஹுமாரா மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட நீதித்திட்டத்தில் சுமார் 235 டாலர் அளவிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவின் ஆளும் கட்சியான மோரேனோவின் முக்கிய கொள்கை அந்நாட்டு பழங்குடியினருக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தருவது என்பதினால் கடந்த 2022 ஆம் ஆண்டு யாக்கி சமூகத்தினருக்கு சொந்தமான 30,000 ஹெக்டேர் அளவிலான நிலம் மீட்கப்பட்டு அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 19.4 சதவிகித மக்கள் தங்களை பழங்குடிகளாக அடையாளப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

SCROLL FOR NEXT