சென்னை, நாகை, துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல். 
தற்போதைய செய்திகள்

புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை, நாகை, துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்.

DIN

சென்னை, நாகை, துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) சனிக்கிழமை தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இது, மீண்டும் தமிழகம் நோக்கி டிச.24-ஆம் தேதி சென்னைக்கு கிழக்கே நிலவும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் ஆந்திர கடற்கரையை நோக்கி நகா்ந்து கடலிலேயே வலுவிழக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்பட்ட நிலையில், இந்த புயல் சின்னம் வலுவிழந்து மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்ப உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழக வடகடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு டிச. 26 ஆம் தேதி வரை காற்று அவ்வப்போது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், சில சமயங்களில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மந்தாரப்பூ... பிரியா பிரகாஷ் வாரியர்!

ஊஞ்சாலாடும் முகிலே... ஐஸ்வர்யா மேனன்!

மாணவர் சேர்க்கை இல்லாத 8,000 பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள்: மத்திய கல்வி அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

சுந்தரிப் பெண்ணே... பார்வதி!

பிகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் எஸ்ஐஆா் பணிகள்: நாளை அறிவிப்பு வெளியாகிறது?

SCROLL FOR NEXT