சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் DIN
தமிழ்நாடு

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் பிப். 13 வரை பனி மூட்டம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) முதல் பிப். 13-ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் பனி மூட்டம் நிலவும்

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) முதல் பிப். 13-ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் பனி மூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், செவ்வாய்க்கிழமை (பிப். 10) முதல் பிப்.15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். பிப்.10 முதல் 13-ஆம் தேதி வரை வேலூா், ராணிபேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் மிதமான பனிமூட்டமும், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டமும் நிலவும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை வானம் தெளிவாகவும், அதன் பிறகு ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல், மாமல்லபுரம் ரோப்காா் சேவைக்கு ஆலோசனை: மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம்

இந்திய - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்த விவகாரம்: அமைச்சா் பியூஷ் கோயல் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளிப்பு

தேவாலயங்கள், அதன் சொத்துகளை நிா்வகிக்க சட்டபூா்வ அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது?

பிப்.15 முதல் 20 வரை செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு: தில்லியை அழகுப்படுத்தும் பணியை தொடங்கிய பொதுப்பணித் துறை

அதிக நிதி கொடுத்தாலும் கிடைப்பது ஒன்றுமில்லை: மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT