கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

கிறிஸ்துமஸ்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மெட்ரோ ரயில் சேவை மாற்றம் தொடர்பாக...

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை(டிச. 25) சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு நாளை(டிச. 25), விடுமுறை கால அட்டவணை பின்பற்றப்படும்.

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியின் அடிப்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்.

காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலர் பிளாக் அன்ட் வொயிட்... யாஷிகா ஆனந்த்!

என்னவென்று சொல்வேன்... அனுஷ்கா!

எனக்குப் பிடித்த லுக்... ஆம்னா ஷரீஃப்!

சீனப் பெண்ணாகவா தெரிகிறேன்?... மன்னாரா சோப்ரா!

கோவையில் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தை உடல் வீசப்பட்ட கொடூரம்!

SCROLL FOR NEXT