ரஷிய-உக்ரைன் போரில் உயிரிழந்த கன்ஹாயா யாதவின் உடல் ஆறு மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. 
தற்போதைய செய்திகள்

ரஷிய போரில் இந்தியர் பலி...6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!

ரஷிய-உக்ரைன் போரில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் 6 மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டதைப் பற்றி..

DIN

ரஷிய-உக்ரைன் போரில் பலியான உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நபரது உடல் 6 மாதங்கள் கழித்து அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (வயது-41) கடந்த ஜனவரி மாதம் ரஷியவில் சமையல்காரராக பணியாற்ற சென்றார்.

சமையல் பணிக்காக செயிண்ட் பீட்டர்ஸ்பர் நகருக்கு சென்ற அவர் ரஷிய ராணுவத்திற்காக உக்ரைனுடனான போரில் சண்டையிட அனுப்பப்பட்டார்.

கடந்த மே மாதம் 9 ஆம் தேதியன்று போரில் அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தனது மனைவிடம் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் அம்மாதம் 25 ஆம் தேதி வரை அவரது குடுமத்தினருடன் தொடர்பிலிருந்ததாகவும் அதன் பின்னர் அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த டிச.6 ஆம் தேதியன்று ரஷியாவிலுள்ள இந்தியத் தூதரகம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த யாதவ் கடந்த ஜூன் மாதம் 17 அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த திங்களன்று ரஷியாவிலிருந்து அவரது உடல் விமானம் மூலம் வாரணாசி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு அவரது கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த கன்ஹையா யாதவிற்கு ஒரு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

முன்னதாக, உயிரிழந்த கன்ஹையா யாதவின் குடும்பத்திற்கு ரஷிய அரசு சார்பில் ரூ.30 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT