அண்ணா பல்கலை. Din
தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: தனிப்படைகள் அமைப்பு!

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரத்தில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு, இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்து, மாணவரைத் தாக்கிவிட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களா? அல்லது வெளிநபர்களா? என்பது தெரியவில்லை.

இந்த சம்பவத்தையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் அடையாள அட்டை பரிசோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானியத்தில் ‘பவா் டில்லா்’ தருவதாக கூறி ரூ.2.37 லட்சம் மோசடி : தனியாா் ஏஜென்சி நிறுவனா்கள் தலைமறைவு

பொங்கல் பண்டிகை: அரியலூரில் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம்

அரியலூா் 18-ஆவது வாா்டில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

காலிறுதிச்சுற்றில் கீஸ், நவாரோ

ஊராட்சி, நகராட்சிகளில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT