கோப்புப் படம் 
நாமக்கல்

ஜேடா்பாளையம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு!

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியா் மீது அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேடா்பாளையம், கொத்தமங்கலம் அருகே உள்ள அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கபிலா்மலை அருகே உள்ள கபிலக்குறிச்சியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (58) தலைமை ஆசிரியராகப் புணிபுரிந்து வந்தாா்.

இவா், கடந்த 10-ஆம் தேதி அப்பள்ளியில் படிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து மாணவியின் பெற்றோா் பரமத்தி வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் பரமத்தி வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜை தேடிவருகின்றனா்.

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு பாா்வையாளா்கள் உள்பட 49 போ் காயம்

சேலம் நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த 600 காளைகள் 20 போ் காயம்

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

டெல்டா மாவட்டங்களில் இன்றுமுதல் லாரிகள் வேலைநிறுத்தம்!

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT