சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்.  
தற்போதைய செய்திகள்

எங்களுக்கு எந்தக் கட்சி பாகுபாடும் கிடையாது: காவல் ஆணையர் அருண்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக...

DIN

எங்களுக்கு எந்தக் கட்சி பாகுபாடும் கிடையாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

அண்ணா பல்கலைக்கழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 140 காவலர்கள் உள்ளனர். அண்ணா பல்கலை. முழுவதும் 11 நுழைவாயில்கள் உள்ளது. வேறு ஏதேனும் வழியில் உள்ளே நுழைந்தாரா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

எஃப்ஐஆர் வெளியானது சட்டப்படி குற்றம். இணையத்தில் எஃப்ஐஆர்-ஐ பார்த்தவர்கள் பதிவிறக்கம் செய்திருக்கலாம். அவர்கள் மூலம் வெளியே கசிந்து இருக்கலாம். வெளியிட்டரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றம் நடக்கும்போது ஞானசேகரின் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்துள்ளது. யாரிடமும் அவர் சார் என்று பேசவில்லை.

கைதான ஞானசேகரின் மீது 20 வழக்குகள் உள்ளன. பாலியல் வன்கொடுமை செய்ததாக எவ்வித வழக்குகளும் இதுவரை பதியப்படவில்லை. புகார் அளித்த ஒரே நாளில் ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றவாளி எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்பது எங்களுக்கு கவலையில்லை.

பாதிக்கப்பட்ட மாணவி பாதுகாப்பாக உள்ளார். காவல் துறையின் நடவடிக்கையால் மாணவிக்கு மனநிறைவுதான். இந்த பெண்ணைப்போல மற்ற அனைவரும் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

சாரவாக் அழகில்... தமன்னா!

SCROLL FOR NEXT