49 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்த ஃபுலா தேவி vanishri
தற்போதைய செய்திகள்

49 ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு இணைந்த பெண்!

உத்தரப் பிரதேசத்தில் 49 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்த பெண்ணைப் பற்றி..

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் சிறுமியாக காணாமல்போன பெண் 49 ஆண்டுகள் கழித்து தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

ஃபுல்மதி (எ) ஃபுலா தேவி, தற்போது 57 வயதாகும் இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியாக இருந்தப்போது தனது தாயுடன் பொருள்காட்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு ஒரு வயதான நபரால் கடத்தப்பட்டு அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் விற்கப்பட்டுள்ளார். ராம்பூரில் வளர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தாலும் பிரிக்கப்பட்ட தனது குடும்பத்தினரை அவர் தேடிவந்துள்ளார்.

ஆசம்கரிலுள்ள தனது உறவினர்களை பல ஆண்டுகளாக அவர் தேடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஃபுலா தேவியைப் பற்றி ராம்பூரைச் சேர்ந்த பேராசிரியை பூஜா ராணி என்பவர் காவல்துறை உயர் அதிகாரி ஹேம்ராஜ் மீனா என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரும் ஆப்ரேஷன் முஸ்கான் எனும் திட்டத்தின் மூலமாக ஃபுலா தேவியின் சகோதரரான லால்தார் ஆசம்கரின் பெட்பூர் கிராமத்தில் வாழ்வது கண்டுப்பிடிக்கப்பட்டது.

பின்னர், காணமல் போன சிறுமி ஃபுலா தேவிதான் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவர்களது குடும்பங்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

49 வருடங்கள் கழித்து குடும்பத்தோடு ஃபுலா தேவி இணைந்தது மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது.

மேலும், இதறகாக உழைத்த ஆசம்கர் காவதுறையினருக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT