தற்போதைய செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை உள்பட 3 உறவினர்கள் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, தாத்தா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை, தாத்தா மற்றும் மாமா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஔரையா மாவட்டத்தின் பிந்துவா கொட்வாளி பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 10-12 ஆண்டுகளுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அவரது தந்தையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடினால் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த சிறுமியின் தந்தை, தாத்தா மற்றும் மாமா ஆகியோர் அவரைப் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி 2 மாதம் கர்ப்பமாகியுள்ளார்.

இதையும் படிக்க: போலி ஆவணங்கள் மூலம் குடியேறிய வங்கதேசத்து நபர் கைது!

சிறுமியின் கர்ப்பத்தைப் பற்றி அறிந்த குற்றவாளிகள் மூவரும் கடந்த டிச.22 அன்று அவரைக் கொலைச் செய்ய முயற்சித்துள்ளனர். அதிலிருந்து தப்பித்து அவர் திப்பியாப்பூர் பகுதியிலுள்ள அவரது உறவுக்காரப் பெண்ணின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமியின் உறவுக்கார பெண்ணின் உதவியோடு அவர் அம்மாநில காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, அந்த மூவரும் சிறுமியின் தாயாரையும் இதேப்போல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மூவரின் மீதும் போக்ஸோ சட்டம் பதிவு செய்த போலீஸார் அவர்களை கைது செய்து நேற்று (டிச.27) சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT