சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டம். (கோப்புப் படம்) 
தற்போதைய செய்திகள்

'தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம்' - தேசிய தகவல் மையம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம் எனத் தகவல்.

DIN

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம் என தேசிய தகவல் மையம்(என்ஐசி) தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் டிச. 23 அன்று இரவு கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத நபர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்படி, ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கை (ஃஎப்.ஐ.ஆா்.) பொது வெளியில் வெளியானது, தமிழகம் முழுவதும் கடும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. முதல் தகவல் அறிக்கையை வெளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும் கூறியிருந்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம் என தேசிய தகவல் மையம்(என்ஐசி) தெரிவித்துள்ளது.

அதாவது தகவல்களைப் பதிவேற்றும்போது ஐபிசி(IPC) சட்டத்தில் இருந்து பிஎன்எஸ் (பாரதிய நியாய சன்ஹிதா) சட்டத்திற்கு தரவுகளை மாற்றுவதில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் முன்னதாக இதனை குறிப்பிட்டிருந்தார்.

'ஐபிசி சட்டமானது, பிஎன்எஸ் சட்டமாக மாறும்போது எஃப்ஐஆர் தானாகவே முடக்கப்பட்டுவிடும். அப்படி மாறும்போது தாமதமானதால் அந்த நேரத்தில் ஒரு சிலர் எஃப்ஐஆரை பதிவிறக்கம் செய்திருக்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு நகல் வழங்கப்படும், அதன்வழியாகவும் இணையத்தில் கசிந்திருக்கலாம்' என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT