பாங்காக் நகரத்தில் பிரபல சுற்றுலா விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வெளிநாட்டினர் பலியாகினர்.
சுற்றுலா நகரமான பங்காக்கின் கான்சாவோ சாலையில் 6 அடுக்குமாடிகளைக் கொண்ட எம்பர் எனும் பிரபல சுற்றுலா விடுதி ஒன்று உள்ளது.
நேற்று (டிச.29) இரவு அந்த விடுதியின் 5 வது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு தங்கியிருந்த 3 வெளிநாட்டினர் பலியாகியுள்ளனர்.
தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்த தாய்லாந்தின் தீயணைப்பு படையினர் தீயை அணைத்து, அந்த விடுதியில் தங்கியிருந்த 75 பேரை பத்திரமாக மீட்டனர்.
இதையும் படிக்க: பாலஸ்தீனம்: இதழியல் மாணவி சுட்டுக் கொலை
மேலும், இந்த விபத்தில் 5 வெளிநாட்டவர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பலியான 3 பேரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாங்காக் நகர ஆளுநர் சத்சார்ட் சிட்டிபுண்ட், புத்தாண்டு நாளன்று அங்க நடவிருக்கும் கொண்டாட்டங்களின் போது வெடிக்கப்படும் பட்டசுக்களை மிகுந்த கவனத்தோடு வெடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.