பலியான அமர் இலாஹி 
தற்போதைய செய்திகள்

யானைகள் தாக்கியதில் இளைஞர் பலி!

கேரளாவில் யானைகள் தாக்கியதில் இளைஞர் பலியானதைப் பற்றி..

DIN

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டு யானைகள் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இடுக்கி மாவட்டம் முள்ளரிங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அமர் இலாஹி (வயது-22), இவர் நேற்று மாலை 3 மணியளவில் அவரது நண்பரான மன்சூர் (41) என்பருடன் அவர்களது வீட்டின் அருகிலுள்ள தேக்கு மரத் தோட்டத்தில் மேய்ந்துக்கொண்டிருந்த தனது மாட்டை இழுத்து வரச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த தோட்டத்தினுள் புகுந்திருந்த இரண்டு காட்டு யானைகள் இருவரையும் பார்த்ததும் விரட்டி தாக்கியுள்ளன. இதில் இருவரும் தப்பித்து ஒட முயன்றுள்ளனர் அப்போது ஒரு யானை அமர் இலாஹியை மிதித்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இருவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து யானைகளை விரட்டியதுடன் இருவரையும் மீட்டு அருகிலுள்ள தொடுப்புழா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அமர் இலாஹி பரிதாபமாக பலியானார்.

கால் எழும்பு முறிந்து படுகாயமடைந்த அவரது நண்பரான மன்சூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் குறித்து விபத்து நிகழ்ந்த வார்டு கவுண்சிலர் ஜிஜோ ஜோசப் கூறியதாவது, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தோட்டங்களுக்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வந்ததாகவும், ஆனால் மனிதர்களை யானைகள் தாக்கியது இதுவே முதல்முறை எனவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க: பிகாரில் தேர்வர்கள் மீது தடியடி: பிரியங்கா காந்தி கடும் கண்டனம்!

முன்னதாக மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் யானைகள் வராமல் இருக்க வனத்துறை சார்பில் சாலைப்பகுதிகளைச் சுற்றியும் 3.5 கி.மீ தூரத்திற்கு தொங்கும் வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை 13 கி.மீ நீளத்திற்கு நீடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோதமங்களம் வனத்துறை அலுவலகத்தின் முன்பு பல முறை போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆனால், வேலி அமைப்பதினால் எந்தவொரு பயனும் இல்லை என்றும் சுற்றியும் குழித் தோண்டப்பட்டால் மட்டுமே யானைகள் வருவதை தடுக்க முடியும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பலியான அமர் இலாஹியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை சமர்பிக்குமாறு வனத்துறை உயர் அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

SCROLL FOR NEXT