தற்போதைய செய்திகள்

மஞ்சு வாரியரா இது? வைரலாகும் புதிய படத்தின் போஸ்டர்!

மலையாள நடிகை மஞ்சு வாரியரின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வைரலாகி வருகிறது.

DIN

மலையாள நடிகை மஞ்சு வாரியரின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வைரலாகி வருகிறது.

தனது 17 வயதில் மலையாளத்தில் நடிகையாக 1995-இல் அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர். பின்னர் நடிகர் திலீப்பை 1998இல் திருமணம் செய்தார். அவரை 2015இல் விவகாரத்து செய்யும்வரை படத்தில் நடிக்காமல் இருந்தார்.

2015க்குப் பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும் மஞ்சு வாரியருக்கு பிருத்விராஜுன் லூசிஃபர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

தமிழில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். தற்போது ரஜினியின் வேட்டையில் படத்தில் நடித்து வருகிறார். மேலும் 4 படங்களி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதில் புட்டேஜ் எனும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்றிரவு வெளியானது. இதில் விஷாக் நாயரை கட்டியணைத்திருக்கும் படம் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தினை இயக்கியுள்ளார் சைஜு ஸ்ரீதரன். கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் எடிட்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT