முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின்

DIN

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் புதன்கிழமை (பிப்.21) மாலை TN-32-N-3938 என்ற பதிவெண் கொண்ட அரசு

பேருந்து சாலை வளைவைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வன் பிரவீன் குமார் (16) த/பெ.அன்பழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயராஜுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது

குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.50,000 முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT