தற்போதைய செய்திகள்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு!

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் மதிமுக இ.யூ.மு.லீ, கொ.ம.தே.க ஆகிய 3 கட்சிகளுக்கு திமுக சனிக்கிழமை தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய சற்று நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகிறார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவு தொடர்பாக வெள்ளிக்கிழமை(பிப்.24) தொகுதி உடன்பாடுகள் குறித்து திமுகவும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கலந்து பேசியதில் திமுக கூட்டணியில்- இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

வேட்பாளர் அறிவிப்பு:

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் மீண்டும் நவாஸ் கணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கத்தில் கொடூர தாக்குதல்- பாஜக எம்.பி.யிடம் ஆளுநா், முதல்வா் நேரில் நலம் விசாரிப்பு

மேற்கு வங்கம்: மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல்- வெள்ள நிவாரணப் பணியில் சம்பவம்

செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

பள்ளிக் கல்வித் துறை அறிவிப்புகள் டிசம்பருக்குள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

பிகாா் எதிா்க்கட்சி கூட்டணியில் 40 தொகுதிகளைக் கேட்கும் இடதுசாரி கட்சி- 19 தொகுதிகளை ஏற்க மறுப்பு

SCROLL FOR NEXT