மக்களவைத் தலைவர் என்பவர் யாருக்கும் தலைவணங்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
இது குறித்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
"நீங்கள் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கை கொடுக்கும்போது மட்டும் மக்களவைத் தலைவர் தலைவணங்கி வணக்கம் சொல்வது ஏன்? - மக்களவைத் தலைவர் என்பவர் யாருக்கும் தலைவணங்கக் கூடாது.
என்னிடம் நிமிர்ந்து நின்று கைகுலுக்கும் மக்களவைத் தலைவர், மோடியிடம் தலைவணங்கி கைகுலுக்குவது ஏன்? - ஒரு எதிர்க்கட்சி தலைவராக நான் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதி.
எதிர்க்கட்சித் தலைவருக்கென தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் உங்களுடைய எதிரிகள் அல்ல. நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்" என்று ராகுல் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ”நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரமானது தனிப்பட்ட முறையிலும் மற்றும் பொது இடங்களிலும் பெரியவர்கள் முன் தலைவணங்கக் கற்றுக் கொடுத்துள்ளது. அதை நான் பின்பற்றுகிறேன்.
நாடாளுமன்றத்தின் மான்பை உறுப்பினர்கள் காக்க வேண்டும், ஒரு உறுப்பினர் பேசும்போது மற்றொரு உறுப்பினர் குறுக்கிடக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.