தற்போதைய செய்திகள்

தூய்மைப் பணியாளர்களை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பு: 2 பேர் பணியிட மாற்றம்!

தூய்மைப் பணியாளர்களை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

DIN

தூய்மைப் பணியாளர்களை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராமப் பகுதியிலிருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்காக நகரப் பேருந்துகளில் செல்வது வழக்கம்.

இந்நிலையில் இவர்கள் செல்லும் நேரத்தில் பேருந்துகளை முறையாக இயக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இயக்கும் பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும், எங்களை கண்டால் பேருந்துகள் நிற்காமல் வேகமாக செல்வதாக புகார் தெரிவித்த தூய்மை பணியாளர்கள், இதனை கண்டித்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பேருந்தில் ஏற்ற‌ மறுத்த நடத்துநர் யேசுதாஸ் மற்றும் நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ராஜா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், இருவருக்கும் பணியிட மாற்றம் செய்து கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் ராஜசேகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT