தமிழ்நாட்டில் பல பேய்களை ஓட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறேன்: அண்ணாமலை
தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்துருக்கேன். இந்த பேயை முடித்துவிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் காத்திருங்கள்
தற்போதைய செய்திகள்தமிழ்நாட்டில் பல பேய்களை ஓட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறேன்: அண்ணாமலை
தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்துருக்கேன். இந்த பேயை முடித்துவிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் காத்திருங்கள்
தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்துருக்கேன். இந்த பேயை முடித்துவிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் காத்திருங்கள் என்று தன்னை வேதாளம் என விமர்சித்த ஜெயகுமாருக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, தேச விடுதலைக்காக, இறுதிவரை துணிச்சலுடன் போராடி, தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள் பிறந்த தினம் இன்று.
மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு, மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று, மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.
நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு, மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டுப் புகழ் சேர்த்தது பெருமைக்குரியது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், இறுதிவரை பின்வாங்காமல், அச்சமின்றிப் போரிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தன்னை வேதாளம் என விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் பல பேய்கள் இருக்கிறது. இந்த வேதாளம் வந்ததே அந்த பேய்களை ஓட்டத்தான். ஒவ்வொரு பேயாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். நிறைய பேய்கள் இருப்பதால் இந்த பேயை முடித்துவிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் காத்திருங்கள் என்று அண்ணாமலை பதிலளித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, ஜெயகுமார் மற்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்,
ஓபிஎஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஓபிஎஸ் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார். ஓபிஎஸ் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தட்டவர் கிடையாது. டிடிவியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். எனவே டிடிவி இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது.
பொறுப்பு கொடுத்த கட்சி அலுவலகத்தையே இடித்து உடைத்தவர் ஓபிஎஸ். நாங்கள் எல்லாம் அதனை கோவிலாக நினைக்கிறோம். கட்சிக்கு எந்தவொரு விசுவாசமும் அவரிடம் கிடையாது எனத் தெரிவித்தார்.
சசிகலா குறித்த கேள்விக்கு, கட்சியில் இல்லாத ஒருவர் 90 சதவீத அதிமுகவினரை இணைத்துவிட்டதாக கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என பதில் அளித்தார்.
ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகள், அவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள். இந்த மூவரை தவிர அதிமுகவில் இருந்து வேறு யாரும் விலகிச் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்றுள்ளது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை எனவும் தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. முதல்வர் மு.க. ஸ்டாலினை மாற்றினால் தான் சட்டம்- ஒழுங்கு சரியாக இருக்கும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் இடத்திலேயே, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இருக்கிறதா என்ற ஒரு சந்தேகம் எழுகிறது. மக்களை பாதுகாக்க கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது என குற்றம்சாட்டினார்.
மேலும் அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என ஜெயகுமார் கூறியிருந்தார்.