சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு நல்லகண்ணு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது மனைவி பொற்கொடி மற்றும் குழந்தையை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 
தற்போதைய செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து ஆர்.நல்லகண்ணு அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்கு நேரில் சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தகைசால் தமிழருமான ஆர்.நல்லகண்ணு அவரது குடும்பத்துக்கு வெள்ளிக்கிழமை ஆறுதல் தெரிவித்தார்.

DIN

ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்கு நேரில் சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவரது குடும்பத்துக்கு வெள்ளிக்கிழமை ஆறுதல் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் பந்தா்காா்டன் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக செம்பியம் போலீகஸாா் வழக்குப் பதிவு, ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரரான ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்த பொன்னை பாலு, அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூா் திருவேங்கடம், திருநின்றவூா் ராமு என்ற வினோத், அருள், செல்வராஜ், சிவசக்தி, கோகுல், விஜய் ஆகிய 11 பேரைக் கைது செய்தனா்.

அவரது கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தகைசால் தமிழர் ஆர். நல்லகண்ணு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது மனைவி பொற்கொடி மற்றும் குழந்தையை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன்!

நடிகை மீரா வாசுதேவன் 3-வது முறையாக விவாகரத்து!

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

SCROLL FOR NEXT