தங்கம் விலை ரூ. 360 உயர்வு: இன்றைய நிலவரம்!
தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ.54,640-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து ரூ.6,830-க்கும், சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ.54,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.99.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.200 குறைந்து ரூ. 99,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜூலை மாதம் தொடங்கியது முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.