மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்வு!
தங்கம் விலை நிலவரம் பற்றி..
சென்னையில் மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,520 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சிறிதளவு ஏற்றம் கண்ட தங்கம் விலை, மாலையில் மேலும் உயர்ந்துள்ளது.
காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 14,600-க்கும், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து ரூ. 1,16,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று ஒரேநாளில் தங்கம் விலை இருமுறை உயர்ந்துள்ளது. அதன்படி, மாலை நிலவரப்படி கிராமுக்கு ரூ. 190 உயர்ந்து ரூ. 14,790-க்கும் சவரனுக்கு ரூ. 1,520 உயர்ந்து ரூ.1,18,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை காலை நிலவரப்படி ரூ. 300-க்கும், கிலோவுக்கு ரூ. 3,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலை நிலவரப்படி வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்கப்படுகிறது.