தங்கம் சவரனுக்கு ரூ. 1,360 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்தது!
தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 30) காலை சவரனுக்கு ரூ. 480 குறைந்த நிலையில் மாலை சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்துள்ளது.
உலக நாடுகளிடையே நடக்கும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,800 - க்கும் கிராமுக்கு ரூ. 60 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,10,160- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 170 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,770 - க்கும் விற்பனையாகிறது.
இன்று மாலை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 255 -க்கும், ஒரு கிலோ ரூ. 2,55,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.