ஹார்திக் பாண்டியா 
தற்போதைய செய்திகள்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வழிநடத்தும் ஹார்திக் பாண்டியா!

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

DIN

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தார். தென்னாப்பிரிக்க வீரர் க்ளாசனின் விக்கெட்டை பாண்டியா வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இறுதியில் இந்திய அணி கோப்பையையும் கைப்பற்றியது.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொந்தக் காரணங்களால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. டி20 தொடரில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவாரென பிசிசிஐ சீனியர் குழு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளது.

டி20 போட்டிகள் ஜூலை 27 -30 வரை நடைபெறுகின்றன. இதையடுத்து ஒருநாள் போட்டிகள் ஆக.2-7வரை நடைபெறும்.

இன்னும் சில நாள்களில் இதற்கான அணிகளை பிசிசிஐ அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT