காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  
தற்போதைய செய்திகள்

மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.97 அடி உயர்வு

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.25 கனஅடியாக உயர்ந்துள்ளது.

DIN

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.25 கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கபினி அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி 3 நாள்களாக உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,054 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து மாலையில் வினாடிக்கு 16,577 கன அடியாக கன அடியாக அதிகரித்தது.

புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 46.80 அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை நீர்வரத்து வினாடிக்கு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை 43.83 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 46.80 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.97 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது அணையின் நீர் இருப்பு 15.85 டிஎம்சியாக உள்ளது.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டாவது நாளாக அடிப்பாலாறு, செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நீரின் இழுவை விசை அதிகமாக இருப்பதால் இரண்டாவது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. காவிரிக் கரைகளில் விட்டு விட்டு மழை பெய்வதால் மீனவர்கள் தங்கள் முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தில் தேசிய அளவிலான பொருளாதார கருத்தரங்கம்

ஆ.தெக்கூா், கீழச்சிவல்பட்டி பகுதிகளில் இன்று மின் தடை

போக்சோ சட்டத்தின் கீழ் கைதானவருக்கு 12 ஆண்டுகள் சிறை

குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் 3 போ் கைது

கொத்தடிமை தொழிலாளா்கள் மூவா் மீட்பு

SCROLL FOR NEXT