கோப்புப்படம். 
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய விரைவு ரயில்: ஜூலை 19-ல் தொடக்கம்!

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையேயான புதிய விரைவு ரயில் சேவை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

DIN

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையேயான புதிய விரைவு ரயில் சேவை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

முதல் ரயில் சேவையை ஜூலை 19 ஆம் தேதி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடக்கி வைக்கிறார். இந்த புதிய ரயில் சேவை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50-க்கு புறப்படும் என்றும், மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35-க்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயிலை இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவைக் குறைபாடு: ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT