முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட மனமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பித்தவிக்கிறார் என்று சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். 
தற்போதைய செய்திகள்

பாராட்ட மனமின்றி பொறாமையில் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்: மேயர் பிரியா

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட மனமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பித்தவிக்கிறார்

DIN

சென்னை: அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட மனமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பித்தவிக்கிறார் என்று சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை!

கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப் பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதல்வர் திகழ்கிறார்; அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.

திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT