தற்போதைய செய்திகள்

கேதார்நாத் யாத்திரை பாதையில் நிலச்சரிவு: 3 பேர் பலி!

கேதார்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

DIN

உத்தரக்கண்ட் மாநிலம் ருத்ரபிரயாத் மாவட்டத்தில் உள்ள சித்வாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

கௌரிகுண்ட் அருகே கேதார்நாத் யாத்திரை பாதையில் பக்தர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கேதார்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக ருத்ரபிரயாக்கில் உள்ள மாவட்டக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் மாநில பேரிடர் மீட்புக் குழுவுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் காயமடைந்த எட்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உத்தரக்கண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT