பரமக்குடியில் செல்போன் வெடித்து ஒருவர் பலி
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ரஜினி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற மற்றொரு இளைஞர் படுகாயமடைந்தார்.
Advertisement
இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.