முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தற்போதைய செய்திகள்

மத்திய பட்ஜெட் 2024: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய பட்ஜெட் 2024-இல் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

DIN

மத்திய பட்ஜெட் 2024-இல் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2024-இல், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி.

* தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்.

* பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு.

* கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்.

* தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு.

* கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்தில் செங்கோட்டையன் மரியாதை! | TVK

சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

விவசாயிகள், வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

நெற்குப்பை நூலகத்துக்கு மாநில அளவிலான விருது

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

SCROLL FOR NEXT