தற்போதைய செய்திகள்

டிமாண்டி காலனி - 2 வெளியீடு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டிமாண்டி காலனி - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தகவல்.

DIN

டிமாண்டி காலனி - 2 வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

மேலும், இப்படத்தில் அருண் பாண்டியன், முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சிஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

முன்னதாக, இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், வெளியீடு குறித்த தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், டிமாண்டி காலனி - 2 திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT