ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது!
ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டுப் பெற்று சுமார் 500 விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில், இன்று மீனவர்கள் அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்தனர்.
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் பிடித்துச் சென்று காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.