பசியோடு வந்த பூனைக்குட்டியை தனது குட்டி போல் பாவித்து பாலூட்டும் நாய். 
தற்போதைய செய்திகள்

பசியோடு வந்த பூனைக்குட்டிக்கு பால் கொடுத்த நாய் விடியோ வைரல்

பசியோடு வந்த பூனைக்குட்டிக்கு பால் கொடுத்த நாய் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

DIN

பசியோடு வந்த பூனைக்குட்டிக்கு பால் கொடுத்த நாய் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இந்த உலகில் தன் பிள்ளைகளுக்காக எந்தவொரு சூழ்நிலையிலும், எதையும் எதிர்த்து போராடும் குணம் தாய்க்கு அதிகம் உண்டு. அது மனிதர்களுக்கும் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் உண்டும். இதனால் தான் உலகில் தாய்மை என்ற உணர்வுக்கு ஈடு, இணை எதுவுமே இல்லை என்று சொல்லி வருகிறார்கள்.

அந்த வகையில் விலங்குகள் தனது தாய்ப்பாசத்தை காட்டும் பல விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலாவது உண்டும்.

இந்த நிலையில், புதுச்சேரியில் நடந்துள்ள நிகழ்வு ஒன்று காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. புதுச்சேரி அருகே பசியோடு வந்த பூனைக்குட்டிக்கு பால் கொடுத்த நாய் விடியோ சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

அதாவது, விலங்குகளில் குறிப்பிட்ட சில இனங்கள் எப்போதும் ஒன்றாக இருக்காது. குறிப்பாக பாம்புக்கு கீரி, நாய்க்கு பூனை என எப்போதும் விரோதமாக செயல்படும் தன்மை உடையவை. ஆனால் தாய்மை உணர்வு என்று வந்தால் சில சமயம் எதிரி விலங்குகள் கூட பசியோடு இருக்கும் குட்டிகளுக்கு உணவை தருவது அபூர்வமாக இருக்கும்.

அந்த வகையில் புதுச்சேரி மண்ணாடிபட்டு கிராமத்தில் ஏரிக்கரை ஓரம் தில்லை அம்மன் கோயில் உள்ளது. இங்கு தாய்மை உணர்வுள்ள நாய் பூனைக்குட்டிக்கு பால் தந்த அபூர்வ நிகழ்வு நடந்துள்ளது. பசியுடன் வந்த பூனைக்குட்டி தனது தாயை போல் நினைத்து நாயிடம் பால் சாப்பிட்டு செல்கிறது. அதை தனது குட்டி போல் பாவித்து நாயும் பாலூட்டுகிறது. இந்த அபூர்வ காட்சியை பார்த்து பலரும் தாய்மை உணர்வுக்கு ஈடு, இணை எதுவுமே இல்லை என்று சொல்லி தாய்மை உணர்வை ரசித்து சென்றனர்.

இது குறித்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

SCROLL FOR NEXT