குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  
தற்போதைய செய்திகள்

நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்: திரௌபதி முர்மு

நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

DIN

புதுதில்லி: நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை, லடாக்கின் காா்கில் மாவட்டத்திலும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் இந்தியா பாகிஸ்தான் இடையே போா் நடைபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி போரில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியை நினைவுகூரும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த இந்திய வீரா்களுக்கு மரியாதை செலுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி காா்கில் வெற்றி நாள் அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்கில் வெற்றி விழாவை லடாக் பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், 25-ஆம் ஆண்டு காா்கில் வெற்றி நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கார்கில் விஜய் திவாஸ் நாளில் ஆயுதப்படைகளுக்கு நன்றி மற்றும் அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பக்க பதிவில், “நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்.” 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது பாரத அன்னையைப் பாதுகாக்க மிக உயர்ந்த தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து கௌரவித்தார். அவர்களின் தியாகமும் வீரமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT