கார்கில் விஜய் திவாஸின் 25வது ஆண்டு விழாவையொட்டி, வெள்ளிக் கிழமை டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீரவணக்கம் செலுத்தினார். 
தற்போதைய செய்திகள்

25-ஆம் ஆண்டு கார்கில் வெற்றி நாள்: பிரதமா் மோடி வீரவணக்கம்

இருபத்தி ஐந்தாம் ஆண்டு காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி, பிரதமா் மோடி கார்கில் போர் நினைவிடத்தில் வீரவணக்கம்.

DIN

டிராஸ்: இருபத்து ஐந்தாம் ஆண்டு காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காா்கில் சென்ற பிரதமா் நரேந்திர மோடி டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை, லடாக்கின் காா்கில் மாவட்டத்திலும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் இந்தியா பாகிஸ்தான் இடையே போா் நடைபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி போரில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியை நினைவுகூரும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த இந்திய வீரா்களுக்கு மரியாதை செலுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி காா்கில் வெற்றி நாள் அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 25-ஆம் ஆண்டு காா்கில் வெற்றி நாளையொட்டி, ஜம்மு-காஷ்மீரின் காா்கில் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, அங்குள்ள போா் நினைவிடத்தில் பிரதமா் மோடி வீரவணக்கம் செலுத்தினார்.

இந்தப் பயணத்தின்போது ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை காணொலி வழியாக பிரதமா் மோடி தொடங்கிவைத்தார்.

லடாக்கில் உள்ள லே நகருக்குச் செல்ல அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் வகையில், கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 15,800 அடி உயரத்தில் 4.1 கி.மீ. நீள சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இது இரட்டை வழி சுரங்கப் பாதையாக இருக்கும். கட்டுமானப் பணி நிறைவடைந்த பின்னா், இது உலகின் உயரமான சுரங்கப்பாதை என்ற பெருமையை பெறும்.

இந்த சுரங்கப்பாதை எல்லை பகுதிக்கு ராணுவ வீரா்கள் மற்றும் தளவாடங்கள் விரைந்து செல்வதை உறுதி செய்வது மட்டுமின்றி, லடாக்கின் பொருளாதார மற்றும் சமூக வளா்ச்சிக்கு உதவும் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்திருந்தது.

முன்னதாக, எக்ஸ் வலைதள பக்கத்தில், கார்கில் விஜய் திவாஸ் நாட்டின் துணிச்சல் மிக்கவர்களின் வீரக் கதையை நம் கண்முன் கொண்டு வருகிறது. அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். இந்த சிறப்புமிகுந்த நாளில் அவர்களுக்கு இதயபூர்வமாக தலைவணங்குகிறேன், வாழ்க இந்தியா என பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும்: இந்தியா நம்பிக்கை

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

திட்டங்களில் முதல்வா் பெயா்: அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனு

SCROLL FOR NEXT