குப்வாராவில்.. - கோப்பிலிருந்து 
தற்போதைய செய்திகள்

குப்வாராவில் கடும் தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம்; நான்கு வீரர்கள் காயம்

குப்வாராவில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர். நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.

DIN

புது தில்லி: ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில், ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார், நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.

கும்கடி ராணுவ முகாம் அருகே, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதற்கு ராணுவத்தினரும் மீண்டும் பதிலடி கொடுத்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகே, மச்சில் செக்டார் பகுதியில் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய பாதுகாப்புப் படை மீது, பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழு நடத்திய தாக்குதலை, இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. பயங்கரவாதிகள் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ வசதியாக், பாகிஸ்தான் ராணுவம், எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது இதுபோன்ற எதிர்பாராத தாக்குதல்களை நடத்திய ராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்புவது வழக்கம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மச்சில் செக்டார் பகுதியில் சனிக்கிழமை முற்பகல் 11 மணி வரையும் இந்த தாக்குதல் நீடித்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

MKStalin vs Vijay | TKS Elangovan நேர்காணல் | MKStalin | vijayakanth | DMK | TVK

கலர் கலராக, ஸ்டைலாக முடி‌ இருந்தால் வேலை கிடைக்காது! மாணவர்களுக்கு அறிவுரை! | Tanjore

Dmk vs Bjp | TKS Elangovan நேர்காணல் | MKStalin | CPRadhakishnan

SCROLL FOR NEXT