குன்றத்தூரில் பரபரப்பு! குடோன் தீப்பிடித்து எரிந்தது!
குடோன் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
குன்றத்தூரில் குடோன் தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை குன்றத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பொருள்கள் சேமித்து வைக்கும் குடோன் செயல்பட்டு வந்தது.
அங்கு பழைய பொருள்களை தரம் பரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென குடோன் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைக் கண்டதும் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வெளியேறினர்.
Advertisement
Advertisement
அருகில் குடியிருப்பு வாசிகள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோன் முழுவதும் தீ பரவியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் குடோன் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
மேலும், தீ விபத்திற்கு காரணம் மின்கசிவா அல்லது நாசவேலை காரணமா என குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.