புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கான சென்டாக் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் 2024 தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு, அனைத்து இந்திய நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு சேர்க்கைக்காக சென்டாக் மூலம் விண்ணப்பிக்காலம் என ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக் குழு(சென்டாக்) ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இதன்படி, இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.