பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புது தில்லி: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்று முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்ற மனு பாக்கருக்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28)நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் 221.7 புள்ளிகளுடன் 22 வயதான இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு இந்திய துப்பாக்கி சுடும் வீரர் அபார வலிமையையும் உறுதியையும் வெளிப்படுத்தி, மனு பாக்கர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று அவர் கூறினார்.
"பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்று, பதக்கப் பட்டியலில் சாதனை படைத்துள்ளார் மனு பாக்கர்! மற்றும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்" என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு வாழ்த்துகள்! மேலும் அவர் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.